அகதிகள் பாதுகாப்பு பிரிவு, தோன்றுவதற்கான அறிவிப்பு, இணைப்பு அ(A)

கொவிட்-19 நீங்கள் உங்கள் விசாரணைக்கு வருகை தர முன்னர் –தெரிந்து கொள்ள வேண்டியவை​

கனடாவின் குடிவரவு மற்றும் அகதிகள் குழு (IRB) நேரடி விசாரணைகளை மீண்டும் ஆரம்பிக்கும் போது, விசாரணை அறை பங்கேற்பாளர்கள், ஊழியர்கள், மற்றும் பார்வையாளர்களை பாதுகாக்கும் முகமாக முக்கியமான கொவிட்-19 சுகாதார மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் இடப்பட்டுள்ளன.

தயவு செய்து பின்வரும் வரையறைகளை தெரிந்து கொள்ளுங்கள்:

உரிமை கோருபவர்கள்: 18 வயதிற்குட்பட்ட உரிமை கோருபவர்கள் அகதிகள் பாதுகாப்பு பிரிவின் விசாரணைகளிற்கு (RPD) அவர்களை சமுகமளிக்க அழைக்காதவிடத்து சமுகம் அளிக்க தேவையில்லை. எனினும் அவரும் அவரது நியமிக்கப்பட்ட பிரதிநிதியும் விரும்பினால், சமுகமளிக்கலாம். RPD ஆனது விசாரணை நிகழ்ச்சி நிரலில் சரீர இடைவெளி தேவைப்பாடுகள் பூர்த்தி செய்யப்படுவதை உறுதிப்படுத்தும். ஆகவே விசாரணையில் பங்குபற்றுபவர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்படலாம். நீங்கள் 18 வயதிற்கு குறைந்த ஒரு உரிமை கோருபவரை அழைத்து வர உத்தேசித்திருந்தால், ஆகக் குறைந்தது தங்களின் விசாரணைத் திகதிக்கு 10 நாட்களிற்கு முன்னதாக RPD இற்கு தயவு செய்து எழுத்தில் அறியத் தரவும். (தொடர்பு கொள்ளும் தகவலானது, தோன்றுவதற்கான அறிவிப்பில் உள்ளது.)

பார்வையாளர்கள்: கொவிட்-19 சுகாதார மற்றும் பாதுகாப்பு நடைமுறையில் உள்ள போது IRB ஆனது விசாரணைக்கு சமுகமளிக்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கையை சரீர இடைவெளி நடைமுறைக்கு மதிப்பளிக்கும் முகமாக மட்டுப்படுத்த விரும்புகின்றது. தம்முடன் பார்வையாளர் ஒருவரும் வருகை தருவார் எனின் (உ.ம்- உணர்ச்சி பூர்வமான ஆதரவிற்கு), தமது விசாரணைத் திகதிக்கு 10 நாட்களிற்கு முன்னதாக RPD இற்கு எழுத்தில் அறியத்தரவும்.

சாட்சியாளர்கள்: நீங்கள் உங்கள் விசாரணைக்கு சாட்சியாளர்களையும் அழைத்து வரலாம். RPD இன் விதிமுறைகளின்படி நீங்கள் சாட்சி (கள்) இன் பெயர் (கள்), சாட்சி கூறுவதற்கான காரணம், சாட்சி கூறுவதற்கு எவ்வளவு நேரம் எடுக்க எதிர்பார்க்கப் படுகிறது, சாட்சி (கள்) உடனான உங்களது உறவுமுறை அத்துடன் அவர்களிற்கு ஒரு மொழி பெயர்ப்பாளர் தேவைப்படுமா என்பதையும், உங்கள் விசாரணைத் திகதிக்கு 10 நாட்களுக்கு முன்னதாக எழுத்தில் அறியத்தர வேண்டும். அத்துடன் நீங்கள் சாட்சி (கள்) நேரடியாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ தோன்றுவார் என்பதையும் RPD இற்கு தங்கள் விசாரணை திகதிக்கு குறைந்தது 10 நாட்களுக்கு முன்னதாக எழுத்தில் அறியத்தர வேண்டும். கொவிட்-19 சுகாதார மற்றும் பாதுகாப்பு நடைமுறையில் உள்ளபோது, இயலுமாயின், தயவு செய்து சாட்சி (கள்) ஐ தொலைபேசி மூலம் தோன்றுவதற்கு ஒழுங்கு செய்யவும்.

நீங்கள் அறிவித்தலைப் பெறும்போது IRB சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைபார்வையிடுமாறு வேண்டப்படுகிறீர்கள்.

மேலும் நீங்கள் சுய மதிப்பீட்டு வினாக்கொத்தையும் பூரணப்படுத்த வேண்டப்படுகிறீர்கள்.​