Claimant's Important Instructions in Tamil

Printable version (PDF, 552 KB)

உரிமை கோருபவரின் முக்கிய வழிமுறைகள்

உங்கள் அகதி பாதுகாப்பு உரிமை கோரலை நீங்கள் செய்த போது நீங்கள் பெற்ற தோன்றும்படி அழைக்கும் அறிவிப்பு குறித்த முக்கிய தகவல்களை உங்களுக்கு இந்த ஆவணம் அளிக்கிறது. பின்வருபவை உட்பட நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய பிற முக்கிய தகவல்களையும் இது கொண்டுள்ளது:

  1. உங்கள் பிரதிநிதியாக உங்கள் செலவில் ஒரு வக்கீலை ஏற்பாடு செய்ய உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால் நீங்கள் தெரிவு செய்யும் வக்கீல் உங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள தேதியில் விசாரணைக்கு வரவேண்டும்.
  2. உங்கள் பாதுகாப்பு உரிமைகோரலை ஆதரிக்கும் ஆவணங்களை பெறுவதும் அவற்றை கனடாவின் குடிவரவு மற்றும் அகதி வாரியத்தின் (ஐஆர்பி) அகதி பாதுகாப்பு பிரிவுக்கு (ஆர்பிடி) அளிப்பதும் உங்கள் பொறுப்பாகும். இந்த ஆதரவு ஆவணங்களை தாமதமின்றி பெறுவதற்கான ஏற்பாடுகளை நீங்கள் இப்போதே செய்ய வேண்டும்.

உங்களை ஒரு விசாரனைக்கு தோன்றும்படி அழைக்கும் அறிவிப்பு குறித்து

நீங்கள் கனடாவில் ஒரு குடிநுழைவிடத்திலோ அல்லது ஒரு உள்நாடு அலுவலகத்திலோ எங்கே உங்கள் அகதி உரிமைகோரலை செய்தீர்கள் என்பதை பொறுத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு உதாரணங்களில் ஒன்றை குறித்த தகவல்களை உடைய தோன்றும்படி அழைக்கும் அறிவிப்பு ஒன்றை நீங்கள் பெற்றிருப்பீர்கள். நீங்கள் எந்த தோன்றும்படி அழைக்கும் அறிவிப்பு பெற்றுள்ளீர்கள் என்பதை அடையாளம் காணுங்கள். பின்னர் தோன்றும்படி அழைக்கும் அறிவிப்பு மாதிரிக்கு அடுத்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள முக்கிய தேதிகள் பகுதியை வாசிக்கவும்.

அகதி உரிமைகோரல் செய்யப்பட்ட இடம்:

ஒரு குடிநுழைவிடம்
(ஒரு நில எல்லை கடவு, விமான நிலையம் அல்லது துறை முகம்)

Notice to Appear for a Hearing section 3 & 4

[Alternate format]

The image illustrates a form.

[Refugee Protection Division Rules, subsection 3(4)]

In the claim for refugee protection of:

Take notice that you must present yourself at:

The Immigration and Refugee Board

[full address where hearing is to be held]

#1 on           , 20    at     for the purpose of attending a hearing of your claim for refugee protection. You must be present and ready to proceed at the start time that has been set. If you do not appear at the hearing fixed for your refugee claim your claim may be declared abandoned.

#2 Special Hearing date if you did not attend the hearing of your claim:

If you fail to attend the hearing on the date indicated above, you must appear on (original hearing date + 5 working days) at 9:00 am, at the same location indicated above, to explain your failure to attend the hearing. Otherwise, your claim may be declared abandoned. If you did not attend the hearing on your claim because of medical reasons, a medical certificate is required. The medical certificate must contain the information set out in the Claimant's Guide. If the Refugee Protection Division (RPD) decides not to declare the claim abandoned, the RPD must start or continue the proceedings on the day the decision is made or as soon as possible after that day. Therefore, you must be prepared to proceed with the hearing of your claim immediately following the special hearing.

#3 Providing the Basis of Claim Form:

The RPD must receive your completed Basis of Claim Form no later than 15 days after the date your claim was referred to the RPD. If you fail to provide your completed Basis of Claim Form on time, you must appear at a special hearing with your completed form. For the date and time of your special hearing, please refer below.

#4 Special Hearing date if the Basis of Claim Form is not received on time:

If the RPD does not receive your Basis of Claim Form on time, you must appear on (5 working days after the due date of the BoC) at 9:00 am, at the same location indicated above, to explain why your Basis of Claim Form was not received by the RPD within the specified period. If you do not appear, the RPD may declare your claim abandoned. If the RPD is satisfied with your explanation and your claim is not declared abandoned, the hearing of your claim will take place as scheduled.

ஒரு உள்நாடு அலுவலகம்
கனடாவின் குடிவரவு மற்றும் அகதி வாரியத்தின் (ஐஆர்பி) அகதி பாதுகாப்பு பிரிவுக்கு (ஆர்பிடி) உங்கள் அகதி உரிமைகோரல் அனுப்பப்படும் போது குடியுரிமை மற்றும் குடிவரவு அலுவலரிடமிருந்து நீங்கள் இந்த படிவத்தை பெறுவீர்கள்.

Notice to Appear for a Hearing section 

[Alternate format]

The image illustrates a form.

[Refugee Protection Division Rules, subsection 3(4)]

In the claim for refugee protection of:

Take notice that you must present yourself at:

The Immigration and Refugee Board

[full address where hearing is to be held]

#1 on           , 20    at     for the purpose of attending a hearing of your claim for refugee protection. You must be present and ready to proceed at the start time that has been set. If you do not appear at the hearing fixed for your refugee claim your claim may be declared abandoned.

#2 Special Hearing date if you did not attend the hearing of your claim:

If you fail to attend the hearing on the date indicated above, you must appear on (original hearing date + 5 working days) at 9:00 am, at the same location indicated above, to explain your failure to attend the hearing. Otherwise, your claim may be declared abandoned. If you did not attend the hearing on your claim because of medical reasons, a medical certificate is required. The medical certificate must contain the information set out in the Claimant's Guide. If the Refugee Protection Division (RPD) decides not to declare the claim abandoned, the RPD must start or continue the proceedings on the day the decision is made or as soon as possible after that day. Therefore, you must be prepared to proceed with the hearing of your claim immediately following the special hearing.

முக்கிய தேதிகள்

எல்லா தோன்றும்படி அழைக்கும் அறிவிப்புகள் குறித்த தகவல்கள்

1 - உங்கள் அகதி பாதுகாப்பு உரிமைகோரல் விசாரணை தேதி: இது உங்கள் தோன்றும்படி அழைக்கும் அறிவிப்பில் இருக்கும் முதல் தேதி. மருத்துவ காரணங்களுக்காக உங்கள் விசாரணைக்கு நீங்கள் போகவில்லையெனில் அதற்கான வழிமுறைகளுக்கு தயவுசெய்து உரிமைகோருபவரின் வழிகாட்டியை பார்க்கவும்.

  • உங்கள் வழக்கை எடுத்துரைப்பதில் உதவுவதற்கு உங்களுடன் யாரையாவது அழைத்து வரலாம். உதாரணமாக இந்த நபர் ஒரு நண்பராகவோ அல்லது உறவினராகவோ இருக்கலாம். ஆனால் உங்கள் விசாரணையில் உங்களுக்காக வந்ததற்காக அந்த நபர் ஆர்பிடி-லிருந்து எந்த ஒரு வகையான ஊதியமும் கேட்கக்கூடாது, உங்களிடமிருந்து எந்த கட்டணமும் வாங்கவும் கூடாது. உங்களுக்காக நீங்கள் கட்டணம் செலுத்தியும் வக்கீலை அமர்த்திக்கொள்ளலாம்.
  • எனினும், அந்த வக்கீல் பிராந்திய சட்ட சங்கத்தில் (சேம்பரே டி நோட்டரே டூ க்யூபெக்) நற்பெயர் பெற்ற அங்கத்தினராகவோ (வக்கீல்கள் மற்றும் துணை சட்டவாளர்கள்) அல்லது கனடா ஒழுங்குமுறை அமைப்பின் குடிவரவு ஆலோசகராகவோ இருக்கவேண்டும். அப்படிப்பட்டவர் உங்கள் விசாரணை யின்போது உங்கள் பிரதிநிதியாக ஆர்பிடி-யில் இருக்கலாம்,கட்டணமும் வசூலிக்கலாம். நீங்கள் வக்கீலை அமர்த்த தீர்மானித்தால் நீங்கள் தான் கட்டணம் செலுத்த வேண்டும்.
  • நீங்கள் வக்கீலை அமர்த்த தீர்மானித்தால் அதை உடனடியாக செய்யவேண்டும். வக்கீலுக்கு கொடுப்பதற்கு போதிய பணம் உங்களிடமில்லாவிடில் உங்கள் பிராந்தியத்தில் உள்ள சட்ட உதவி அலுவலகத்தை அணுகி ஏதாவது உதவி கிடைக்குமா என பார்க்கவும். நீங்கள் பெற்ற ஆர்பிடி பரிந்துரை பெட்டியில் சட்ட உதவி அலுவலகங்களின் ஒரு பட்டியல் உள்ளது.
  • உங்கள் விசாரணையின் போது உங்களுக்கு உதவ யாரைவது நீங்கள் கேட்டிருந்தால், உங்கள் விசாரணை தேதியில் அவர்கள் வரவேண்டும். உங்கள் விசாரணை தேதியை பெற்ற ஐந்து நாட்களுக்குள்ளாக நீங்கள் வக்கீலை அமர்த்திய தகவலை எங்களுக்கு தெரிவிக்கவில்லையெனில்,உங்கள் விசாரணை தேதியை உங்கள் வக்கீல் வருவதற்கேற்ற தேதியாக ஆர்பிடி மாற்றிமைக்காது.

2 - உங்கள் சிறப்பு விசாரணை தேதி: உங்கள் தோன்றும்படி அழைக்கும் அறிவிப்பில் உள்ள இரண்டாவது தேதி.

  • முதல் தேதியில் நீங்கள் உங்கள் அகதி பாதுகாப்பு விசாரணை க்கு போகாவிட்டால், உங்கள் உரிமைகோரல் கைவிடப்படும் அபாயம் உள்ளது. இந்த சிறப்பு விசாரணைக்கு நீங்கள் கட்டாயம் செல்லவேண்டும்.
  • உங்கள் சிறப்பு விசாரணையில், உங்கள் அகதி பாதுகாப்பு உரிமைகோரல் விசாரணைக்கு நீங்கள் ஏன் செல்லவில்லை
  • என்பதற்கான காரணத்தை நீங்கள் விளக்கவேண்டும்.
  • உங்கள் விளக்கத்தை ஆர்பிடி ஏற்கவில்லை எனில், உங்கள் உரிமைகோரல் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்படும்.
  • உங்கள் சிறப்பு விசாரணைக்கு நீங்கள் செல்லவில்லை என்றால் ஆர்பிடி உங்களை தொடர்பு கொள்ளாமலேயே உங்கள்
  • உரிமைகோரலை கைவிடப்பட்டதாக அறிவித்துவிடவும் முடியும்.
  • ஆர்பிடி உங்கள் உரிமைகோரல் கைவிடப்பட்டதாக அறிவித்துவிட்டால், உங்கள் உரிமைகோரலை தொடரவோ அல்லது
  • எதிர்காலத்தில் வேறு உரிமைகோரல் செய்யவோ முடியாது.

நீங்கள் ஒரு குடிநுழைவிடத்தில் அகதி பாதுகாப்பு உரிமைகோரியவராக இருந்தால் (ஒரு நில எல்லை கடவு, விமான நிலையம் அல்லது துறை முகம்), ஒரு குடிவரவு அலுவலர் ஆர்பிடி பையை அளித்திருப்பார்.

இந்த பையில் உரிமைகோரலின் அடிப்படை படிவம் மற்றும் உங்கள் தோன்றும்படி அழைக்கும் அறிவிப்பில் தோன்றும் விசாரணை தேதிக்கு முன்பாக நீங்கள் பூர்த்தி செய்யவேண்டிய பிற ஆவணங்களும் இருக்கும். நீங்கள் பெற்றுள்ள தோன்றும்படி அழைக்கும் அறிவிப்பு, முதல் பக்கத்தில் இடது புறத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் குடிநுழைவிட மாதிரியில் இருந்தால், ஆர்பிடி-க்கு உங்கள் பூர்த்தி செய்யப்பட்ட உரிமைகோரலின் அடிப்படை படிவத்தை அனுப்புதலில் கூடுதலாக இரண்டு முக்கிய தேதிகளை கவனத்தில் கொள்ளவேண்டும். உங்கள் அகதி உரிமைகோரல் விசாரணை தேதிக்கு முன்பாக கீழே கொடுக்கப்பட்டுள்ள நேரத்திற்குள்ளாக இந்த படிகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

3 - அகதி பாதுகாப்பு பிரிவு (ஆர்பிடி) உங்கள் உரிமைகோரலின் அடிப்படை படிவத்தை பெற வேண்டிய தேதி: உங்கள் உரிமைகோரலின் அடிப்படை படிவம் பெறப்பட வேண்டிய தேதியை கண்டுபிடிக்க நீங்கள் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து 15 காலண்டர் நாட்களை எண்ணுங்கள். இந்த தேதி சனிக்கிழமை,ஞாயிற்றுக்கிழமை அல்லது ஒரு விடுமுறை நாளாக இருந்தால் அகதி பாதுகாப்பு பிரிவு (ஆர்பிடி) அலுவலகங்கள் மூடப்பட்டிருக்கும், உரிய தேதி அடுத்த வேலை நாளாக இருக்கும்.

  • உங்கள் உரிமைகோரலை ஆதரிக்கும் உங்கள் எல்லா ஆவணங்களையும் சேர்ப்பதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும். உங்கள் உரிமைகோரலின் அடிப்படை படிவத்துடன் சேர்க்க வேண்டிய ஆவணங்கள் எவை என்பதை உரிமைகோருபவரின் வழிகாட்டி தெரிவிக்கும்.
  • உங்கள் உரிமைகோரலை ஆதரிக்கும் நீங்கள் இன்னும் பெறவில்லையெனில், தாமதமின்றி அவற்றை இப்போதே பெறுவதற்கான ஏற்பாடுகளை செய்யவேண்டும்.
  • உங்கள் உரிமைகோரலின் அடிப்படை படிவத்தை நேரடியாகவோ அல்லது 20 பக்கங்களுக்கு குறைவாக இருந்தால் தொலைநகல் வாயிலாகவோ அல்லது கூரியர் மூலமாகவோ உங்கள் உரிமைகோரல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் ஆர்பிடி பதிவக அலுவலகத்தில் சேர்க்கப்படவேண்டும். முகவரிகள் மற்றும் தொலைநகல் எண்கள் உரிமைகோருபவரின் வழிகாட்டியில் உள்ளன.

4 - “உரிமைகோரலின் அடிப்படை படிவம் உரிய சமயத்தில் பெறப்படவில்லையெனில் சிறப்பு விசாரணைக்கான தேதி” என்ற பகுதியில் உள்ள தேதி: உங்கள் உரிமைகோரலின் அடிப்படை படிவத்தை ஆர்பிடி உரிய நேரத்தில் பெறவில்லையெனில் (நீங்கள் அதை பெற்ற 15 நாட்களுக்குள்), நீங்கள் சிறப்பு விசாரணைக்கு செல்ல வேண்டும்.

  • உங்கள் தோன்றும்படி அழைக்கும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ள இடத்தில் குறிப்பிட்ட தேதியில் காலை 9 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகவேண்டும்.
  • உங்கள் சிறப்பு விசாரணையில், உங்கள் உரிமைகோரலின் அடிப்படை படிவத்தை உரிய நேரத்தில் பெற இயலாமல் போனதற்கான காரணத்தை நீங்கள் ஆர்பிடி-க்கு விளக்கவேண்டும்.
  • உங்கள் சிறப்பு விசாரணைக்கு நீங்கள் செல்லவில்லை என்றால் ஆர்பிடி உங்களை தொடர்பு கொள்ளாமலேயே உங்கள் உரிமைகோரலை கைவிடப்பட்டதாக அறிவித்துவிடவும் முடியும்
  • ஆர்பிடி உங்கள் உரிமைகோரல் கைவிடப்பட்டதாக அறிவித்துவிட்டால், உங்கள் உரிமைகோரலை தொடரவோ அல்லது எதிர்காலத்தில் வேறு உரிமைகோரல் செய்யவோ முடியாது.

Notice to claimant:
An English version of these important instructions is included

Avis au demandeur d’asile :
Une version française de ces instructions importantes pour le demandeur d’asile est incluse

給避難申請人的通知:
內含繁體中文版的避難申請須知

Értesítés az igénylő számára:
Ezen fontos utasítás magyar változatát is tartalmazza

난민신청자에 대한 통지
이 중요한 설명의 한국어판이 포함되어 있음

给避难申请人的通知 :
内含简体中文版的避难申请须知

ਦਾਵ੍ਹਾ ਕਰਨ ਵਾਲੇ ਲਈ ਸੂਚਨਾ
ਇਹਨਾਂ ਹਿਦਾਇਤਾਂ ਦਾ ਪੰਜਾਬੀ ਤਰਜਮਾ ਸ਼ਾਮਿਲ ਹੈ

К сведению заявителя:
Русскоязычная версия данных важных инструкций прилагается

Xususin ku socota Qofka Dalabka Sameynaya:
Waxaa la socda qoraalkan oo Af Soomaali ku tarjuman

Aviso al solicitante de asilo:
Se incluye una versión en español de estas instrucciones importantes

تنبيه إلى مقدم طلب اللجوء:
ستجد طيه النسخة العربية مرفقة بهذه التعليمات الهامة

دعوے داروں کے لئے نوٹس:
ان اہم ہدایات کا اردو ترجمہ شامل کیا گیا ہے

பிற முக்கிய தகவல்கள்

உங்கள் தொடர்பு தகவல்கள்: உங்கள் உரிமைகோரலை செய்தபோது நீங்கள் கனடாவில் உள்ள உங்கள் முகவரியை, குடியுரிமை மற்றும் குடிவரவு கனடா (சிஐசி) அல்லது கனடா எல்லை சேவைகள் முகமை (சிபிஎஸ்ஏ)-க்கு கொடுக்கவில்லை எனில், நீங்கள் அதை ஆர்பிடி-க்கும் மற்றும் சிஐசி அல்லது சிபிஎஸ்ஏ-க்கும் (உங்கள் உரிமைகோரலை ஆர்பிடி-க்கு அனுப்பிவைத்தது எதுவோ) விசாரணைக்கான தோன்றும்படி அழைக்கும் அறிவிப்பை பெற்ற 10 நாட்களுக்குள்ளாக தெரிவிக்கவேண்டும். ஆர்பிடி மற்றும் சிஐசி அல்லது சிபிஎஸ்ஏ-க்கு உங்கள் முகவரி அல்லது தொலைபேசி எண் மாற்றங்களையும் உடனடியாக எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும். உங்கள் தொடர்பு தகவல்களை நேரத்திற்கு நீங்கள் ஆர்பிடி-க்கு தெரிவிக்காவிடில், ஆர்பிடி-க்கு உங்களை தொடர்பு கொள்ள முடியாமல் போவதால் உங்கள் உரிமைகோரல் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்படலாம்.

வக்கீல்: உங்கள் விசாரணையில் உங்களுக்கு உதவ வக்கீலை நீங்கள் வைக்க தீர்மாணித்தால்

  • நீங்கள் வாடகைக்கு வக்கீல் அமர்த்தினாலோ அல்லது வக்கீலை மாற்றினாலோ, நீங்கள் அவரின் பெயர், முகவரி, தொலைபேசி எண், தொலைநகல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி இருப்பின் அதையும் ஆர்பிடி-க்கும் மற்றும் சிஐசி அல்லது சிபிஎஸ்ஏ-க்கும் (உங்கள் உரிமைகோரலை ஆர்பிடி-க்கு அனுப்பிவைத்தது எதுவோ) எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கவேண்டும். உங்கள் வக்கீல் பிராந்திய சட்ட சங்கத்தில் (சேம்பரே டி நோட்டரே டூ க்யூபெக்) அங்கத்தினராகவோ அல்லது கனடா ஒழுங்குமுறை அமைப்பின் குடிவரவு ஆலோசகராகவோ இருந்தால் அந்த நிறுவனத்தின் பெயரையும் அவரது அங்கத்தினர் எண்ணையும் அளிக்க வேண்டும்.
  • நீங்கள் வக்கீலை மாற்றினால், புதிய வக்கீல் உங்கள் உரிமைகோரலை ஆதரிக்கும் எல்லா ஆவணங்களையும் குறித்த சமயத்தில் பெறுவதை உறுதி செய்வது உங்கள் பொறுப்பு. இது நீங்கள் ஆர்பிடி அல்லது பிறர் உங்கள் முந்தைய வக்கீலுக்கு அளித்த எல்லா ஆவணங்களை உள்ளடக்கியதாகும்.

உங்கள் விசாரணை தேதி அல்லது நேரத்தை மாற்றுவதற்கான விண்ணப்பம்: உங்கள் விசாரணை தேதி அல்லது நேரத்தை மாற்ற நீங்கள் விரும்பினால், அதை நீங்கள் உடனடியாக எழுத்துப்பூர்வமாக விண்ணப்பிக்க வேண்டும்.

  • எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து மேலதிக தகவல்கள் பெற, உரிமைகோருபவரின் வழிகாட்டி மற்றும் அகதி பாதுகாப்பு பிரிவு சட்டங்கள் 50 மற்றும் 54-ஐ பார்க்கவும்.
  • மருத்துவ காரணங்கள் அல்லது ஒரு அவசரம் ஆகியவை தவிர மற்ற காரணங்களுக்காக நீங்கள் செய்யும் விண்ணப்பத்தை, உங்கள் விசாரணைக்கு குறித்த தேதிக்கு குறைந்தது மூன்று அலுவல் நாட்களுக்கு முன்பாக ஆர்பிடி பெறவேண்டும்.
  • உங்கள் விசாரணை தேதியை நீங்கள் மாற்ற விரும்புவதற்கான காரணம் மருத்துவ காரணமாக இருந்தால் உங்கள் விண்ணப்பதுடன் மருத்துவ சான்றிதழை இணைக்க வேண்டும். மருத்துவ சான்றிதழில் இருக்கவேண்டியவை குறித்த தகவல்கள் உரிமைகோருபவரின் வழிகாட்டியில் உள்ளது.
  • உங்கள் விண்ணப்பதுடன் சான்றிதழின் நகலை இணைத்திருந்தால் நீங்கள் கூடிய விரைவில் ஆர்பிடி-க்கு மூலப்பிரதியை கொடுக்கவேண்டும்.
  • தவிர்க்க முடியாத சூழ்நிலையாக இருந்தால் தான் உங்கள் விசாரணை தேதி மற்றும் நேரத்தை மாற்ற ஆர்பிடி சம்மதிக்கும். உதாரணமாக, தங்குமிடம் தேவைப்படும் பலவீனமான நபராக நீங்கள் இருந்தால், உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத ஏதோ ஒன்று அல்லது ஒரு அவசரம் நீங்கள் உங்கள் உரிமைகோரலை தொடர நீங்கள் உங்களாலான எல்லாவற்றையும் செய்தீர்கள் என்பது போன்ற சூழ்நிலைகளில் ஆர்பிடி சம்மதம் அளிக்கலாம்.
  • உங்கள் விசாரணையின் தேதி மற்றும் நேரத்தை ஆர்பிடி மட்டுமே மாற்றியமைக்க முடியும். ஆர்பிடி வேறு ஏதும் செய்யும்படி உங்களுக்கு சொல்லவில்லை என்றால் உங்கள் தோன்றும்படி அழைக்கும் அறிவிப்பில் உள்ள தேதி மற்றும் நேரத்தில் நீங்கள் விசாரணைக்கு செல்லவேண்டும்.
  • விசாரணைக்கு நீங்கள் செல்லவில்லை என்றால் உங்கள் உரிமைகோரல் கைவிடப்பட்டதாக ஆர்பிடி அறிவித்துவிடவும் முடியும்.

உங்கள் விசாரணை இடத்தை மாற்றுவதற்கான விண்ணப்பம்: உங்கள் விசாரணை இடத்தை மாற்ற நீங்கள் விரும்பினால், அதை நீங்கள் உடனடியாக எழுத்துப்பூர்வமாக விண்ணப்பிக்க வேண்டும்.

  • எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து மேலதிக தகவல்கள் பெற, உரிமைகோருபவரின் வழிகாட்டி மற்றும் அகதி பாதுகாப்பு பிரிவு சட்டங்கள் 50 மற்றும் 53- றை பார்க்கவும்.
  • உங்கள் விசாரணைக்கு குறித்த தேதிக்கு குறைந்தது 20 நாட்களுக்கு முன்பாக உங்கள் விண்ணப்பத்தை ஆர்பிடி பெறவேண்டும்.
  • உங்கள் விசாரணை தேதியை மாற்ற நீங்கள் விண்ணப்பித்திருந்தும் எந்த பதிலும் வரவில்லையெனில் உங்கள் தோன்றும்படி அழைக்கும் அறிவிப்பில் உள்ள இடத்திற்கு சென்று விசாரணைக்கு தயாராக இருக்கவும்.
  • ஆர்பிடி-க்கு சட்டம் 53 மற்றும் உரிமைகோருபவரின் வழிகாட்டியில் கொடுக்கப்பட்டுள்ள காரியங்களின் படி உங்கள் விசாரணை இடம் மாற்றம் முழுமையாக நியாயமாக இருந்தால் மட்டுமே விசாரணை இடம் மாற்றப்படும்.

விசாரணை மொழி: உங்கள் தோன்றும்படி அழைக்கும் அறிவிப்பு நீங்கள் உங்கள் விசாரணைக்காக தெரிந்தெடுத்த கனடாவின் அதிகாரப்பூர்வ மொழி யில் இருக்கும் (ஆங்கிலம் அல்லது பிரஞ்சு).

  • உங்கள் விசாரணை பிற அதிகாரப்பூர்வ மொழியில் இருக்க விரும்பினால், அதை எழுத்துப்பூர்வமாக ஆர்பிடி-க்கு தெரிவிக்கவும்.
  • உங்கள் விசாரணைக்கு குறைந்தது 10 நாட்களுக்கு முன்பாக ஆர்பிடி உங்கள் விண்ணப்பத்தை பெறவேண்டும்.

மொழிபெயர்ப்பு மொழி: ஆர்பிடிக்கு உங்கள் வழக்கு அனுப்பப்பட்ட போது அல்லது அதற்கு பின்னர் உங்கள் உரிமைகோரலின் அடிப்படை படிவத்தில் நீங்கள் தெரிந்தெடுத்த மொழிபெயர்ப்பு மொழி அல்லது கிளை மொழியை மாற்ற விரும்பினால், அதை எழுத்துப்பூர்வமாக ஆர்பிடி-க்கு தெரிவிக்கவும்.

  • நீங்கள் விரும்பும் புதிய மொழிபெயர்ப்பு மொழி அல்லது கிளை மொழியை சேர்க்கவும்.
  • உங்கள் விசாரணைக்கு குறைந்தது 10 நாட்களுக்கு முன்பாக ஆர்பிடி உங்கள் விண்ணப்பத்தை பெறவேண்டும்.

பற்றுறுதிமொழி அல்லது சத்திய பிரமானம்: உங்கள் விசாரணையின் தொடக்கத்தில், பற்றுறுதிமொழியை நீங்கள் எடுக்க வேண்டும்.இந்த பற்றுறுதிமொழியானது உண்மையை சொல்வதற்கும் கேட்கப்படும் கேள்விகளுக்கு சிறந்த பதில்களை அளிப்பதற்குமான வாக்குறுதியாகும்.ஒரு புனித நூலின் மீது நீங்கள் சத்திய பிரமானம் செய்ய விரும்பினால் விசாரணைக்கு நீங்கள் அந்த புனித நூலை கொண்டுவர வேண்டும்.

அலைந்து திரிகிறவர் இருப்பிடம்: மொன்டிரியல், க்யூபெக்; டொரன்டோ, ஒன்டேரியோ; கல்கரி, ஆல்பர்ட்டா அல்லது வன்கூவர், பிரிட்டிஷ் கோலம்பியா, தவிர பிற இடத்தில் உங்கள் விசாரணை நடைபெறவிருந்தால் உங்கள் தோன்றும்படி அழைக்கும் அறிவிப்பில் உங்கள் விசாரணை நடைபெற இருக்கும் இடத்தின் முழு முகவரி இல்லாதிருப்பதை நீங்கள் பார்ப்பீர்கள். அதற்குபதிலாக, இது போன்ற செய்து இருக்கும்:

Immigration and Refugee Board
You are required to phone 1-8XX-XXX-XXXX within 5 days of receiving this notice to confirm the address of your hearing.
[City], [Province]

Commission de l'immigration et du statut de réfugié
Vous devez composer le 1-8XX-XXX-XXXX Pour l'adresse exacte de votre audience dans les 5 jours d'avoir reçu cet avis.
[Ville], [Province]

அறிவிப்பில் உள்ள தொலைபேசி எண்ணை அழைத்து உங்கள் அகதி உரிமைகோரல் விசாரணை மற்றும் மேலே விளக்கப்பட்ட சிறப்பு விசாரணைகள் நடைபெறும் சரியான முகவரியை பெற வேண்டும் என அது உங்களுக்கு சொல்லும். அகதி உரிமைகோரல் குறித்து அகதி அலுவலகத்திற்கு நீங்கள் எழுத வேண்டியிருந்தால் தோன்றும்படி அழைக்கும் அறிவிப்பின் கீழே உள்ள தொடர்பு முகவரியை தொடர்பு கொள்ளவும்

மேலதிக தகவல்களுக்கு, உரிமைகோருபவரின் வழிகாட்டியில் உள்ளவற்றை தயவுசெய்து பார்க்கவும் அல்லது உங்கள் உரிமைகோரல் அனுப்பப்பட்ட ஆர்பிடி பதிவகத்தை அணுகவும்.
அந்நிய மொழி பதிப்புகள் தகவல் அளிக்கும் நோக்கத்தில் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளன. ஏதாவது வேறுபாடுகள் இருந்தால் ஆங்கிலம் மற்றும் பிரஞ்சு பதிப்புகள் முன்னுரிமை பெறும்..

ஆர் பி டி பதிவக அலுவலகங்கள்

கிழக்கு பிராந்தியம்

மொன்டிரியல்
Guy-Favreau Complex
200 René-Lévesque Blvd. West
East Tower, Room 102
Montreal, Quebec H2Z 1X4
Telephone: 514-283-7733 or 1-866-626-8719
Fax: 514-283-0164

மத்திய பிராந்தியம்

டொரன்டோ
74 Victoria Street, Suite 400
Toronto, Ontario M5C 3C7
Telephone: 416-954-1000
Fax: 416-954-1165

மேற்கு பிராந்தியம்

வன்கூவர்
300 West Georgia Street,
Suite 1600
Vancouver, BC V6B 6C9
Telephone: 604-666-5946 or 1-866-787-7472
Fax: 604-666-3043

கல்கரி
225 Manning Rd. NE, 2nd Floor
Calgary, Alberta T2E 2P5
Telephone: 403-292-6620 or 1-855-504-6764
Fax: 403-292-6131