கொவிட்-19 சுய மதிப்பீட்டு வினாக்கொத்து

​குடிவரவு அகதிகள் சபை வளாகத்தில், நேரடியாக இவ் விசாரணைகளில் கலந்து கொள்ளும் பங்கேற்பாளர்கள் அனைவரும், இந்த சுய மதிப்பீட்டு வினாக்கொத்தை பூரணப்படுத்த வேண்டும்:

 • உங்கள் விசாரணை நாளிலிருந்து 14 நாட்களுக்கு முன்பும்;
 • விசாரணை நாளிலிருந்து 14 நாட்களினுள், எந்த நேரத்திலும் உங்களுக்கு அல்லது உங்களுடன் வசிப்பவர்கள் யாருக்காவது, 4 வது கேள்வியில் தரப்பட்டுள்ள ஏதாவது நோய் அறிகுறிகள் காணப்படின்,
 1. ஒரு வைத்தியர், சுகாதார நலன்புரி வழங்குநர், அல்லகு பொது சுகாதார அலகு உங்களை இன்று (உங்கள் வீட்டில்) தனிமைப்படுத்திக் கொள்ள கூறினார்களா?
 2. ஆம் இல்லை

 3. கடந்த 14 நாட்களில் நீங்கள் கொவிட்-19 பரிசோதனையில் நேர்மறையா?
 4. ஆம் இல்லை

 5. நீங்கள் கொவிட்-19 பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருக்கிறீர்களா?
 6. ஆம் இல்லை

 7. உங்களுக்கு அல்லது உங்களுடன் வசிப்பவர்கள் யாருக்காவது கடந்த 14 நாட்களில் கீழ்வரும் நோய் அறிகுறிகள் தென்பட்டதா?
 8. புதிய அல்லது தீவிரமடையும் இருமல்

  ஆம் இல்லை

  மூச்செடுப்பதில் சிரமம்

  ஆம் இல்லை

  தொண்டை வலி

  ஆம் இல்லை

  மூக்கு ஒழுகுதல், தும்மல், மூக்கடைப்பு ( காலத்துக்கு காலம் ஏற்படும் ஒவ்வாமை, மூக்கிலிருந்து நீர் வடிதல், இவை போன்ற நோய் அறிகுறிகள்தவிர்ந்த)

  ஆம் இல்லை

  கரகரப்பான குரல்

  ஆம் இல்லை

  விழுங்குவதில் சிரமம்

  ஆம் இல்லை

  நுகர்தல் அல்லது சுவையில் ஏற்படும் புதிய மாற்றம் (கள்)

  ஆம் இல்லை

  குமட்டல்/வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி

  ஆம் இல்லை

  விவரிக்க முடியாத சோர்வு/உடல்நலக் குறைவு

  ஆம் இல்லை

  குளிர்தல்

  ஆம் இல்லை

  தலைவலி

  ஆம் இல்லை

​​
 1. கடந்த 14 நாட்களில் நீங்கள் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டீர்களா, அல்லது வெளி நாட்டுப் பயணம் மேற்கொண்டவர்களுடன் தொடர்பு கொண்டீர்களா?
 2. ஆம் இல்லை

 3. உங்களுக்கு காய்ச்சல் உள்ளதா?
 4. ஆம் இல்லை

 5. உங்களுக்கு சுவாச சம்பந்தமான நோயுள்ளவர்களுடனோ அல்லது கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்ட அல்லது நோயிருக்கலாம் என்பவர்களுடன் கடந்த 14 நாட்களில் தொடர்புகளை கொண்டிருந்தீர்களா? ஆம் எனில், 8வது கேள்விக்கு செல்லவும்.
 6. ஆம் இல்லை

 7. கொவிட்-19 தொற்றுறுதி செய்யப்பட்ட அல்லது தொற்றிருக்கலாம் என சந்தேகப்பட்ட ஒருவருடனோ நெருங்கிப் பழகிய போதும், நீங்கள் செய்யும் வேலைகளுக்கேற்ப தேவைப்பட்ட/ அல்லது பரிந்துரைக்கப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை அணிந்தீர்களா (உ.ம், காப்பு மூக்கு கண்ணாடி கையுறைகள், முகக் கவசமும் நெடுஞ் சட்டையும், அல்லது N95 ஏரோசொல் மருத்துவ செயல்முறை உருவாக்கம் உடன் (AGMPs))?
 8. ஆம் இல்லை

நீங்கள் 1 இலிருந்து 6 வரையான எந்த ஒரு கேள்விகளுக்கும் ஆம் என பதிலளித்திருந்தால், குடிவரவு அகதிகள் சபைக்கு செல்ல வேண்டாம். அந்த பிரிவை உடனடியாக தொடர்பு கொள்ளவும்​. நாங்கள் அதே நாளில் அதே நேரத்தில் உங்கள் விசாரணையை மெய்நிகரில் மேற்கொள்ளப் பார்ப்போம். அப்படியில்லாவிடில், உங்கள் விசாரணை பிறிதொரு தினத்தில் நடைபெறும்.

நீங்கள் வினா 7க்கு ஆம் என்றும் வினா 8 க்கு இல்லை என்றும் பதிலளித்தால், குஅச (IRB) விற்கு செல்ல வோண்டாம். அந்த பிரிவை உடனடியாக தொடர்பு கொள்ளவும்​. நாங்கள் அதே நாளில் அதே நேரத்தில் உங்கள் விசாரணையை மெய்நிகரில் மேற் கொள்வோம். அப்படியில்லாவிடில், உங்கள் விசாரணை பிறிதொரு தினத்தில் நடைபெறும்.